ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ!

ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ!

ஓசூரிலிருந்து பெங்களூரு புறநகர் பகுதியான பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் தொழில் நகரான ஒசூருக்கு இரு மாநிலத்திருந்தும் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு தலைநகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் பெங்களூருவிற்கு வேலைக்கு செல்பவர்களும் வேலை முடிந்து வீட்டிற்கு வருபவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விடுமுறை நாட்களில் தமிழ்நாடு வரும் பேருந்துகள் கூட ஓசூர் வர நெடுநேரம் நெரிசலில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இதனை தீர்க்க உருவாக்கப்பட்ட பறக்கும் பாலம் போன்ற திட்டங்களும் அதன் கொள்ளவை கடந்து நெரிந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த சிரமத்தை தீர்க்கும் வகையில் ஓசூர் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.  ஏற்கனவே பெங்களூரு புறநகர் பகுதியான பொம்மச்சந்திரா வரை பெங்களூரு மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில்பொம்மசந்திரா மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து  20.5 கிமீ தொலைவில் உள்ள ஒசூருக்கு மெட்ரோ ரயில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த 20. 5 கிமீ தொலைவில் 11.7 கிமீ கர்நாடகா மாநிலத்திலும், மீதமுள்ள 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இரண்டு இடங்களையும் இணைக்கும்போது மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி...கோரிக்கை விடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்!