இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்...மகிழ்ச்சியில் பயணிகள்!

Published on

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ நிர்வாகம் அறிவித்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு அமலுக்கு வந்தது. 

சென்னை விமான நிலையம் முதல்  விம்கோ நகர் வரையிலான வழித்தடம், விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் வழித்தடம் மற்றும் சென்னை பரங்கி மலையிலிருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் உள்ளிட்டவை பொதுவான நேரங்களில், 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள் அனைத்தும் இன்று முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன.  

இதன்காரணமாக, மெட்ரோ பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும் என்பதால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com