மேட்டுப்பாளையம்: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

மேட்டுப்பாளையம் அருகே சரிவாக வந்த மினி லாரி மீது நேராக சென்று மோதிய இருசக்கர வாகன விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம்: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.  இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூருக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மினி லாரி - பைக் மோதி விபத்து:

அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மினி லாரி ஒன்று அன்னூர் நோக்கி வந்துள்ளது. அப்போது அந்த மினி லாரி தள்ளாடி கொண்டு வந்து கொண்டிருந்தது.. இதனை கண்ட சதீஷ், பதற்றமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் நேராக வண்டியை கொண்டு மினி லாரி மீது மோதினார். இந்த விபத்தி சதீஷ் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

சி.சி.டி.வி காட்சிகள்:

இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டார்.  இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.