கொரோனாவின் மோசமான 3வது அலை...  அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை...

உலகம் முழுவதும் கொரொனா 3 வது அலை மிக மோசமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவின் மோசமான 3வது அலை...  அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை...

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்தும், அதன் இருப்பு குறித்தும்அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும்  செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், 7 வது மெகா தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார். 60 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா 3 வது அலை மோசமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அளவில் சுகாதாரத்துறை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளதாகவும், இதில் பங்கேற்பதற்காக அங்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார். நீட் தேர்வு ரத்து,  புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, 19 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்க வேண்டி உள்ளதால் அதற்கான நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.