பெட்ரோல் பங்க் விபத்து; "ஒருவர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது" அமைச்சர் மாசு பேட்டி!

Published on
Updated on
1 min read

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 30 வயது தக்க ஒருவர் பலியாகி உள்ளது வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிளித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியின் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்த பெட்ரோல் பங்கின் கூரை விழுந்து, 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பலியானார் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஒரு இறப்பு நேர்ந்து உள்ளது 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியன் ஆயில் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம், நெடுஞ்சாலைத்துறையோ மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர்களை வைத்து துண்டித்தால் அதில் இருந்து பறக்கும் நெருப்புத் துளிகள் பெட்ரோல் பங்க் என்பதால் பெரிய விபத்தாக நேரிடும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த பணியை செய்ய வேண்டாம் என்று துறைகளை தடுத்திருக்கிறோம் என்றார். 

ஹேண்ட் கட்டர் அல்லது எலக்ட்ரிக் கட்டரை வைத்து மேற்கூரையை அப்புறப்படுத்தினாலும் இது ஒரு ஆபத்தான விஷயம், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மேற்கூரையை கிரேன் வைத்து தூக்கி பார்த்தனர் உள்ளே யாரும் இல்லை என்று உறுதி செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் உள்ளார்கள், அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இறப்பு ஒன்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. பெரிய அளவிலான பாதிப்பு யாருக்கும் இல்லை ஒரு இறப்பு மட்டும் நேர்ந்துள்ளது என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com