"பொது எதிரியை வீழ்த்த சபதம் ஏற்க வேண்டும்" அமைச்சர் மெய்யநாதன்!

மத்துவத்தையும் சமூக நீதியையும் காக்க வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் மகளிருகான மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். போட்டியின் தொடக்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை திமுகவினர்  நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மாநில அளவிலான மகளிருகாண மின்னொளி கபாடி போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். போட்டியை தொடங்கி வைக்க வந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு கபாடி வீராங்கனைகளும் பள்ளி மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது,

மேலும் இந்த கபாடி போட்டியை தொடங்கி வைத்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடி விளையாட்டிற்கு திமுக அரசு தான் உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளதோடு இட ஒதுக்கீட்டையும் அளித்துள்ளது என்றும் அது மட்டும் இன்றி முன்புள்ள கபாடி விளையாட்டு வீரர்கள் தரையில் விளையாண்டு காயம் அடைந்த நிலையில் தற்போது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபாடி மைதானங்களில் மேட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் திமுக ஆட்சியில் தான் விளையாட்டு துறை மேம்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், சமத்துவத்தையும் சமூக நீதியையும் காக்க வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என அனைவரும் கலைஞர்  கருணாநிதி நூற்றாண்டில் சபதம் இருக்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் சூளுரைத்தார்.

இதையும் படிக்க: "உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!