''மூடப்பட்ட 174 செங்கல் சூளைகள் விரைவில் திறக்கப்படும்'' அமைச்சர் மெய்யநாதன்!!

''மூடப்பட்ட 174 செங்கல் சூளைகள் விரைவில் திறக்கப்படும்'' அமைச்சர் மெய்யநாதன்!!

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விரைவில் செங்கல் சூளைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை முத்தரையர் நல சங்கத்தின் 21 ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடைபெற்றது.இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு என்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டதுடன் மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அமைச்சர் மெய்யநாதன்,கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளை தொழில் வளம் மிகுந்த பகுதியாக மாற்றி பல்வேறு தொழிற்சாலைகளை அமைத்து தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார், எனக் கூறியுள்ளார்.

மேலும், அந்த அடிப்படையில் கோபை தடாகம் பகுதியில் 174 செங்கல் சூளைகள் ஹாக்கா எனும் மலைப் பகுதிகளில் இருந்ததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மூலமாக கடந்த காலத்தில்  மூடப்பட்டதாகவும், விரைவில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மூடப்பட்டுள்ள 174 செங்கல் சூலைகளையும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "அண்ணாமலை செல்வது நடைபயணம் இல்லை, வாகன பயணம்" முத்தரசன் விமர்சனம்!!