அமைச்சர் நேருவின் டிவிட்டர் கணக்கு முடக்கம் !!!  பதிவில் நாசா குறித்த தகவல்கள் ரீட்வீட்... 

அமைச்சர் நேருவின் டிவிட்டர் கணக்கு முடக்கம் !!!  பதிவில் நாசா குறித்த தகவல்கள் ரீட்வீட்... 

திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேருவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.வரிசையாக அவரது டிவிட்டர் பக்கத்தில் நாசா குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் தெரிந்து கொள்ள |கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்...!

அமைச்சர் கே.என்.நேரு :

கே .என். நேரு தமிழக அரசின் நகர்ப்புற அமைச்சராக பதவியில் உள்ளவர்.இவர் திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார் .மு. கருணாநிதி அவர்களின் நம்பிக்கை களஞ்சியமாக இருந்தவர் கே. என். நேரு.இவர் மின்சாரத்துறை, பால்வளத்துறை,உணவுத் துறை,தொழிலாளர் நலத்துறை ,செய்தித்துறை,மற்றும் கூட்டுறவுத்துறை போன்ற துறைகளில் அமைச்சராக  பணியாற்றியுள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அமைந்த திமுக அமைச்சரவையில் 2021 மே 7 அன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சசராக பதவியேற்றார்.ஆரம்ப காலத்தில் திமுகவில் யூனியன் தலைவர் பதவியில் இருந்தார்.அண்ணா அறிவாலயம் போல் திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டியுள்ளார்.

சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.கே.என்.நேரு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றிய புகைப்படங்களை நேற்று பதிவிட்டிருந்தார். அதன் பிறகு நாசாவின் தகவல்கள் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் அவரது டிவிட்டர் கணக்கு திடிரென ஹேக் செய்யப்பட்டு தொடர்ச்சியாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான  நாசா குறித்த தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கத்தை மீட்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்திற்கு திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது.