திராவிட முன்னேற்றக் கழகம் எதையும் எதிர்கொள்ளும் என அக்கட்சியின் துணை செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் எதையும் எதிர்கொள்ளும் என அக்கட்சியின் துணை செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் திமுகவின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சி.வி.கணேசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, என்.ஆர் .இளங்கோ உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை சந்தித்து அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார் என தெரிவித்தார்.