கோயில் குடமுழுக்கு... உறுதியளித்த அமைச்சர் சேகர் பாபு...!!

கோயில் குடமுழுக்கு... உறுதியளித்த அமைச்சர் சேகர் பாபு...!!

உதகமண்டலம் தொகுதியில் உள்ள மூவுலகரசியம்மன் திருக்கோவிலுக்கு நடப்பாண்டில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், உதகமண்டலம் தொகுதி, உதகமண்டலம் நகராட்சி காந்தல் பகுதியில் உள்ள அருள்மிகு மூவுலகரசியம்மன் திருக்கோவிலின் இராஜகோபுரத்தை சீரமைத்து, குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மூவுலகரசியம்மன் திருக்கோவிலின் ராஜகோபுரத்தை சீரமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து துறை ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மேலும், 39 லட்சம் ரூபாய் செலவில் குடமுழுக்கு நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறிய அவர், மேலும் 75 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இந்தாண்டு குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் 625 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்திய பெருமை முதலமைச்சரையே சாரும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிக்க:   சட்டப்பேரவையில் ஓபிஎஸ்ஸால் முடிவுக்கு வந்த பிரச்சினை...!!!