தமிழ்நாடு
ஜவ்வாது மலைக்கு விரைவில் பேருந்து வசதி...! அமைச்சர் சிவசங்கர் உறுதி...!!
செங்கம் ஜவ்வாது மலை பகுதிக்கு பேருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தில் போது செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஜவ்வாது மலைப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால் ஜவ்வாது மலைக்கு மக்கள் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை பேருந்தையே பார்க்காத பகுதியான வத்தல் மலை கிராமங்களுக்கு கூட பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும், அதேபோல ஜவ்வாது மலை பகுதி மக்களுக்கு பேருந்து வசதி விரைவில் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
.png)
