பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி...!

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தின விழாவை கொண்டாடும் விதமாக, தேனி மாவட்டம் சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதையும் படிக்க : சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவுள்ள மீனவர்கள்...!

தொடர்ந்து, திமுக கழகத்தின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியிலும், இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து,  புதிய அங்கன்வாடி மற்றும் நூலக கட்டிடங்களை திறந்து வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.