"நாடகத்திலாவது பங்கேற்றுக்கொள்ளுங்கள்" EPS-யிடம் , அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!!

"நாடகத்திலாவது பங்கேற்றுக்கொள்ளுங்கள்" EPS-யிடம் , அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!!

திமுகவினர் நடத்திய நீட்டிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தினை, எடப்பாடி பழனிச்சாமி நாடகம் என விமர்சித்தற்கு, அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் நீட்டுக்கு எதிரான கருத்துகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீட் நடைமுறைக்கு வந்த பின்னர் மாணவர்கள் பலர் அவர்களது கனவான மருத்துவ படிப்பினை படிக்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த தற்கொலை செய்துக்கொண்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே வந்து தற்பொழுது விக்னேஸ்வரன் என்னும் மாணவன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் நிற்கின்றது.

இந்த இரட்டை தற்கொலை தமிழ்நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி இணைந்து கடந்த 20ம் தேதி அன்று தமிழ் நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் மதுரையை தவிர்த்து உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர்.

சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தினை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாப்களின் கலந்துகொண்டார். அப்பொழுது, நீட்டிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் அதிமுகவும் இணைந்துகொள்ள வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதேபோல், அன்று அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், எடப்பாடி பழனிச்சாமியால் அன்று 32 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

அப்பொழுது, அமைச்சர் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமியிடம் , "பெருமைகளை கூட நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீட்டிற்கு எதிராக ஒரு தீர்மானவாது இயற்றுங்கள்" என கேட்டிருந்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், அவர்கள் நடத்தும் எல்லாம் நாடகம் தான் என எடப்பாடி பழனிச்சாமி சாடியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி அதற்கு பதில்  கூறியுள்ளார். அதாவது "நாடகமாகவே இருக்கட்டும். அந்த நாடகத்திலாவது நீங்களும் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று அழைத்தேன்.  நீட் தேர்வு ரத்தானால் அதன் முழு பெருமைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். இப்போதும் கூறுகிறேன். 21 மாணவர்களை இழந்தது போதாதென்று இப்போது பெற்றோரையும் இழக்கத் தொடங்கிவிட்டோம். நீட் ரத்து அதிமுகவின் கொள்கையும் தானே?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க || உண்மை தகவலை மறைத்து வழக்கு தொடர்ந்த நபர்... உயர்நீதிமன்றம் வைத்த ஆப்பு!!