தேவர் சிலைக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மரியாதை...!

தேவர் சிலைக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மரியாதை...!

தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக உடல்நலக் குறைவால், முதலமைச்சர் பசும்பொன் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ஆளுநர் மாளிகையில் உள்ள முத்துராமலிங்க தேவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.