ஸ்ரீரங்கநாதர் கோயில், அங்காளம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர் பாபு, மஸ்தான் ஆய்வு!!

செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோயில் மற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் அமைச்சர்கள் சேகர் பாபு, மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கநாதர் கோயில், அங்காளம்மன் கோயிலில்  அமைச்சர்கள் சேகர் பாபு, மஸ்தான் ஆய்வு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிங்கவரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கோயில்.

நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலில் மாற்றுதிறனாளிகள், வயதானவர்கள் படி ஏற முடியாததால் மாலை பாதை அமைக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல், மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோயிலில் உள்ள மொட்டை அடிக்கும் வளாகம், கழிப்பறை வளாகம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுச் செல்வர்.