மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர்கள் ஆய்வு...!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர். 

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புயலால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகளவில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மொத்தம் 435 பேர் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

இதேபோல் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின் வெட்டு ஏதும் ஏற்படாத வகையில் அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.