உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சரின் முதலீடுகள் குறித்த அரசு முறைப்பயணத்தை சுட்டி காட்டி, வெளிநாடு சென்றால் மட்டும் முதலீட்டாளர்கள் வந்துவிட மாட்டார்கள் என்றும், உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும், தமிழகத்திலேயே எண்ணற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை இருப்பதாகவும், அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.