மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்...!

திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்த நாரீஸ்வரர் மலைக் கோவிலில் தமிழக அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்...!


திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்த நாரீஸ்வரர் மலைக் கோவிலில் தமிழக அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் பட்லூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர். அப்போது திருச்சங்கோடு பகுதியில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில் சாமிதரிசனத்திற்காக வந்துள்ளனர். மலைக் கோவிலுக்கு வந்த அமைச்சர்களை, திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து செங்கோட்டு வேலவர் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி, பெருமாள் சன்னதி, பைரவர் சன்னதி ஆகிவற்றில் தமிழக அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, நகர மன்ற தலைவர் நளினி, நகர மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.