கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர்கள்...

சென்னை பேரூர் அருகே நடைபெற்ற கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும், அன்பரசன் ஆகியோர் கிரிக்கெட் விளையாடி அசத்தினர்.

கிரிக்கெட் விளையாடி அசத்திய அமைச்சர்கள்...

சென்னை பேரூர் அருகே நடைபெற்ற கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும், அன்பரசன் ஆகியோர் கிரிக்கெட் விளையாடி அசத்தினர்.

சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மின் விளக்குகளால் ஆன கிரிக்கெட் மைதான தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பணியாற்றி வருவதாகவும், எந்த அமைச்சரின் துறையில் நல்ல பெயர் கிடைத்தாலும், அதற்கு முக்கிய காரணம், முதலமைச்சர் ஸ்டாலின் தான் எனவும் புகழாரம் சூட்டினார். அத்துடன்,  அமைச்சர் அன்பில் மகேஷ் பந்து வீச, அமைச்சர் அன்பரசன் பேட்டிங் செய்தார். பின்னர் இருவரும் மாறி, மாறி பந்துவீசி பேட்டிங் செய்து விளையாடியதை பார்வையாளர்களும், மாணவர்களும், கரங்களைத் தட்டி ரசித்தனர்.