வலுவடையும் மோச்சா புயல்... 11 மாவட்டங்களில் கனமழை!!

வலுவடையும் மோச்சா புயல்... 11 மாவட்டங்களில் கனமழை!!

தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள மோச்சா புயல் இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மோச்சா” புயல் இன்று இரவு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை மாலையில் மிகத் தீவிர புயலாக வலுப் பெற்றும் என்றும்,  இது  14-ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க:  2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... முதலமைச்சர் ஸ்டாலின்!!