தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழையாம்...!எந்தெந்த இடம் தெரியுமா?

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழையாம்...!எந்தெந்த இடம் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்:

தொடர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 8ம் தேதி வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் எனவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சீட்டுக்கட்டு குறித்த பாடத்தை நீக்க வேண்டும்...அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

மேலும் சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.