மூக்கையாத்தேவர் சாதித் தலைவர் அல்ல...! சீமான்

மூக்கையாத்தேவர் சாதித் தலைவர் அல்ல...! சீமான்

மூக்கையாத்தேவர் சாதித் தலைவர் அல்ல. தமிழினத்தின் தலைவர் என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

மூக்கையாத்தேவரின் 100வது பிறந்த நாளான இன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த சீமான் "மூக்கையாத்தேவர் சாதித் தலைவர் அல்ல. தமிழினத்தின் தலைவர்" என புகழாரம் சூட்டியுள்ளார்.

மூக்கையாத்தேவர் குறித்து தொடர்ந்து பேசும்போது " ஒரே நேரத்தில் சட்ட மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் போட்டியிட்டு வென்ற பெருமைக்கு உரியவர். அவரை வெறுமனே ஒரு சமூகம் சார்ந்த தலைவராக பார்க்க முடியாது. ஏனென்றால் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவராக இருந்து பல ஆண்டுக்காலம் பணியாற்றியவர். காந்திய இயக்கங்களோடு இணைந்தும் பணியாற்றி இருக்கிறார்.

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருக்கும்போது கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப் பட்டது. அதனை எதிர்த்து கடுமையாக வாதிட்டவர். கட்சத் தீவை எடுத்து கொடுப்பதால் எங்கள் மக்களுக்கு நீங்கள் துரோகம் செய்கிறீர்கள் என இந்திராகாந்தியை பார்த்து குற்றம் சாட்டியாவர். துணிச்சல் மிக்கவர்; நேர்மையாளர்; ஆகச் சிறந்த பண்பாளர். அப்படி ஒரு அரசியல் தலைமை கிடைப்பது அரிதினும் அரிது.

அவர் ஒரு சமூக தலைவர் கிடையாது; தமிழினத்தின் தலைவர். அவரை கடமைக்கு போற்றக் கூடாது; அவரை போற்றுவதையே கடமையாகக் கொள்ளவேண்டும். எனவே அவரை போற்றும் விதமாக அவரது நினைவிடம் அமைந்துள்ள உசிலம்பட்டியில் வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தும். அதில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "பேரறிஞர் அண்ணாவிற்கே தாற்காலிக சபாநாயகராக இருந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர்

. எம்ஜிஆர் அவருக்காக தான் அறிவித்த வேட்பாளரையே திரும்ப பெற்றார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.