செயற்கைக் கோள்கள் அதிக அளவில் விண்ணில் ஏவப்படும் - மயில்சாமி அண்ணாதுரை...

வர்த்தக ரீதியாக புதிய செயற்கைக்கோள்களை உருவாக்க இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

செயற்கைக் கோள்கள் அதிக அளவில் விண்ணில் ஏவப்படும் - மயில்சாமி அண்ணாதுரை...

சென்னை | பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தலைப்பிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களை விட அதிக எடை கொண்ட 36 செயற்கை கோள்கள்  வரும் 26 ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கிறது.  

இந்த செயற்கைக்கோள்கள் உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள முடியும் உலகத்தின் அனைத்து பகுதிகளையும் இணைப்பது போல் இந்த செயற்கைக்கோள் உள்ளது இதனால் உலகில் பல பல காரியங்கள் செய்யப்பட உள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்...!

மேலும் வர்த்தக  ரீதியாக இனிமேல் அதிக செயற்கைக்கோள்களை செய்ய இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு உருவாகும் என கூறிய அவர் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பின் இந்தியாவின் வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை அதிக அளவில் செலுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

வர்த்தக ரீதியாக மட்டும் அல்லாமல் ஸ்ரீஹரி கோட்டாவை ஒப்பிடும் போது குலசேகரப்பட்டினம் தொழில் ரீதியாக சிறந்த இடமாக என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறிய அவர் நிலவை நோக்கிய பயணம் உலகில் அதிக அளவில் உருவாகி வருகிறது. நாசா மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும் படிக்க | மின்கம்பங்களை புதைவட மின் கம்பிகளாக மாற்ற முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை - செந்தில் பாலாஜி!