காவிரியில் 1 லட்சம் அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு.. சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

காவிரியில் 1 லட்சம் அடிக்கு மேல் தண்ணீர் திறப்பு.. சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

 காவிரியில் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

75,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

இன்று காலை 46 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 51 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 35 ஆயிரம் கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக 40  ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 75  ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இதனிடையே காவிரியில் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

பொது மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆடிப்பெருக்கு நாளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நீராட வேண்டாம் எனவும்  ஆற்றில் அருகில் செல்வதோ, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுப்பதோ கூடாது என பொது மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.