ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போலி சங்கங்கள் களையெடுக்கப்படும்- அமைச்சர் காந்தி உறுதி!  

ஆயிரத்து 134 கைத்தறி சங்கங்களில் 25% போலியானவை என கண்டறியப்பட்டு ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்..

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போலி சங்கங்கள் களையெடுக்கப்படும்- அமைச்சர் காந்தி உறுதி!   

சென்னை தலைமை செயலகத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்..அப்போது கூறிய அவர்..கைத்தறித்துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இளைஞர்களை கவறும் வகையில் புதிய டிஸ்சைன்களும் கைத்தறியில் கொண்டு வர ஆடை வடிவமைப்பு நிபுணர்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாள் அணிய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அதன் பின் கைத்தறி ஆடைகள் விற்பனை கணிசமான அளவில் உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பல போலி கைத்தறி சங்கங்கள் முறைகேடாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மொத்தம் உள்ள 1134 சங்கங்களில் 25%க்கும் மேற்பட்ட சங்கங்கள் போலியானைவை என்பது கண்டிறியப்பட்டு ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் அளவில் கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 154 கோ ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளதாகவும், அதில் 107 கடைகள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், தனியார் கடைகளுக்கு இணையாக கோ ஆப் டெக்ஸ் கடைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, திரைக்கலைஞர்களை வைத்து  விளம்பரப்படுத்தவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் கைத்தறி துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் நவம்பர் மாதம் சென்னையில் மிகப்பெரிய கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுக்குறித்து வரும் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பார் என்றும், துபாயில் நடைப்பெற உள்ள கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்..