மகளுடன் விஷமருந்திய செவிலியர்..! கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு தான் காரணமாம்..!

நெல்லையில் குடும்ப பிரச்சனையால் விஷம் அருந்தி தாய் மற்றும் எட்டு வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
மகளுடன் விஷமருந்திய செவிலியர்..! கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு தான் காரணமாம்..!
Published on
Updated on
1 min read

நெல்லை சந்திப்பு சிஎன் வில்லேஜ் தெருவை சேர்ந்தவர் மாடசாமி.  இவரது மனைவி சுமதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக பணிபுரிந்து வந்தார்.  

இந்த நிலையில் நேற்று சுமதி திடீரென விஷம் அருந்தியதுடன் தனது 8 வயது மகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். இதை கவனித்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி சுமதியின் 8 வயது மகள் நேற்றிரவு உயிரிழந்தார். தொடர்ந்து சுமதியும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பளப் பணம் செலவு செய்வது தொடர்பாக மாடசாமி சுமதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் மனவேதனையில் சுமதி தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாடசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com