இறங்க மறுக்கும் பெட்ரோல் விலை... கடுப்பாகும் வாகன ஓட்டிகள்...
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாயை தாண்டியதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமானங்கள், பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த விமானங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், அபுதாபி உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகள் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல் அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில், தாயே கடல் தாயே, தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், "கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து அனைத்து கட்சியும் ஒருங்கிணைந்து போராடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல், அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.
மேலும், "கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரை அவமரியாதை செய்கின்றனர், இதை ஒரு திமுக கட்சிக்காரர்கள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || "அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கவேண்டியுள்ளது" அமைச்சர் சிவசங்கர்!!
கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கும் நிலை உள்ளது சிதம்பரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய குளிரூட்டும் ஓய்வறை திறப்பு விழா, பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரருக்கு பணி ஆணை வழங்கும் விழா, மற்றும் பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா சிதம்பரம் போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.
அப்பொழுது பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "15 ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளை நிறுத்த வேண்டுமென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 1500 பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டி உள்ளது. அதற்காக புதிய பேருந்துகளை தற்பொழுது வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். விரைவில் அதற்கும் தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "எந்த பகுதிக்கும் பேருந்து இயக்கப்படவில்லை என தெரிவித்தால் உடனடியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படாத காரணத்தினால் பழைய பேருந்துகளை வைத்து இயக்கும் சூழ்நிலை உள்ளது. தற்போது புதிய பேருந்துகள் வாங்க உள்ளோம். மேலும் 1500 பேருந்துகளை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 200 பேருந்துகள் பணிகள் முடிந்து வந்துள்ளது. மற்ற பேருந்துகளும் பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே இந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்படும்" என கூறியுள்ளார்.
இதையும் படிக்க || விடைபெறுகின்றது 2000 ரூபாய் நோட்டுகள்!!
சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் 30 வயது தக்க ஒருவர் பலியாகி உள்ளது வருத்தம் அளிக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியின் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்த இடத்தில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்த பெட்ரோல் பங்கின் கூரை விழுந்து, 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பலியானார் என்று மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஒரு இறப்பு நேர்ந்து உள்ளது 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியன் ஆயில் சிஇஓவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம், நெடுஞ்சாலைத்துறையோ மாநகராட்சியோ எலக்ட்ரிக் கட்டர்களை வைத்து துண்டித்தால் அதில் இருந்து பறக்கும் நெருப்புத் துளிகள் பெட்ரோல் பங்க் என்பதால் பெரிய விபத்தாக நேரிடும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அந்த பணியை செய்ய வேண்டாம் என்று துறைகளை தடுத்திருக்கிறோம் என்றார்.
ஹேண்ட் கட்டர் அல்லது எலக்ட்ரிக் கட்டரை வைத்து மேற்கூரையை அப்புறப்படுத்தினாலும் இது ஒரு ஆபத்தான விஷயம், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மேற்கூரையை கிரேன் வைத்து தூக்கி பார்த்தனர் உள்ளே யாரும் இல்லை என்று உறுதி செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நலமுடன் உள்ளார்கள், அவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இறப்பு ஒன்று வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. பெரிய அளவிலான பாதிப்பு யாருக்கும் இல்லை ஒரு இறப்பு மட்டும் நேர்ந்துள்ளது என்றார்.
இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!
காவிரி விவகாரத்தில் துரைமுருகனின் பேச்சு மழுப்பலாகவும் நழுவலாகவும் கோழையை போல் உள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக பாஜக குறித்து பேசிய ஓபிஎஸ் மற்றும் பண்ரூட்டி ராமச்சந்திரன் குறித்த கேள்விக்கு, ஆஸ்கார் நாயகனை வைத்து கொண்டு பத்து கட்சி தாவிய பண்ரூட்டி பேசியிருக்கிறார். அதை ஆஸ்கார் நாயகன் ஓபிஎஸ் அமைதியாக பார்த்து கொணருந்தார். இத்தகைய செயல் கொண்டவர் பச்சோந்தி ஓபிஎஸ் என விமர்சித்தார்
மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது கருணாநிதி தான் என்றும் ஜெயலலிதா வாஜ்பாய் அரசிற்கு ஆதரவு தரும் பொழுது ஐந்து நிபந்தனைகளில் ஒன்றாக நீர் விவகாரத்தை வைத்ததாகவும் ஆனால் அதை வாஜ்பாய் அரசு நிறைவேற்றாததால் ஆதரவையே திரும்ப பெற்றவர் ஜெயலலிதா எனவும் கூறினார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல தமிழக முதல்வர் தைரியாமாக செயல்பட்டருக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே காவிரி விகாரத்தை பற்றி பேசிவிட்டு சென்றிருக்கலாமே என்றும் துரைமுருகன் இது தொடர்பாக பேசும் போது மழுப்பலாகவும் நழுவலாவும் கோழை போன்று பேசுகிறார் எனவும் சாடினார்.
இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!