நகர்த்தி வைக்கப்பட்ட கோவில் கருவறை... நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கிராம மக்கள்...

சாலை  பணிக்காக கோவிலை இடிக்க மறுத்த மக்கள் நவீன தொழில்நுட்பத்தில் கோவில் கருவறை மண்டபம் நகர்த்தி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்...

நகர்த்தி வைக்கப்பட்ட கோவில் கருவறை... நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கிராம மக்கள்...

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான மாரியம்மன் கோவில்  உள்ளது. இந்த கோவில் கருவறை மண்டபம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருப்பதால் உடனே இடித்து தரவேண்டும் என்று  கிராம மக்களிடம் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

இதை கேட்டு வேதனை அடைந்த கிராம மக்கள்  கோவில் கருவறை மண்டபத்தை இடிக்க மனமில்லாமல் மாற்று வழியில்  கருவறை மண்டபத்தை அகற்ற முடிவு செய்தனர். இதுகுறித்து கட்டிட தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது கருவறை மண்டப கட்டிடத்தை சேதமின்றி அப்படியே நவீன தொழில்நுட்பத்தில் ஜாக்கிகள் உதவியுடன் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்க முடியும் என கட்டிட வல்லுனர்கள்  ஆலோசனை தெரிவித்தனர்.

இதனையடுத்து நவீன தொழில்நுட்பத்தில் கட்டிடத்தை நகர்த்த முடிவு செய்து  அதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களை உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து வரவழைத்தனர். அவர்கள் கோவில் கருவறை மண்டபத்தை சுற்றி பள்ளங்கள் தோண்டி 100-க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் பொருத்தி  கருவறை மண்டபத்தை பாதுகாப்பாக நகர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 10 அடி தூரம் நகர்த்தி உள்ளனர். இன்னும் ஓரிரு வாரத்தில் 40 அடி தூரத்தில் நகர்த்தி வைக்கப்பட உள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். கிராம மக்களின் செயலால் கருவறை மண்டபம் இடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.