ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 சிறப்பு வார்டு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு 10 சிறப்பு வார்டு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மை நோயாளிகளுக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு:

இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மைக்கு சிறப்பு வார்டு:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குரங்கம்மைக்கு சென்னையில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மைக்கான அறிகுறி இல்லை எனவும், தமிழகம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாக தெரிவித்த அவர், மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, ஓய்வில் இருக்கிறார் எனவும் அவர் கூறினார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல்வாதிகளுக்கு மட்டும் கொரோனா பரவுவதாகக் கூற முடியாது என கிண்டலாக கூறியது குறிப்பிடத்தக்கது.