
இந்திய விஞானிகளை கேலி செய்த பிரகாஷ்ராஜின் இந்திய அடையாளங்கள் பறிக்க படவேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேசு மற்றும் தமிழ்நாடு நாடர் சங்க நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கடிதம் ஒன்றை அளித்தனர். இதில் நேற்று நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் விக்கிரம லேண்டர் எடுத்த புகைப்படம் என்று பதிவிட்ட கேலிச்சித்திரம், இந்திய வின்கானிகளை கிண்டல் செய்யும் விதமாக இருக்கின்றது. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடார் சங்க தலைவர் முத்துரமேசு, நேற்று பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய மக்கள், விஞ்ஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படம் நிலாவில் இஸ்ரோ தலைவர் டீ ஆத்துவது போல உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று தெரிவித்தார்.
மேலும், பிரகாஷ்ராஜூக்கு இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறித்துக்கொள்ள வேண்டும். அவர் இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர் என்று கூறினார். தொடர்ந்து அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதி அளித்தாகவும் தெரிவித்தார்.