காவல்துறை அலைக்கழிப்பே என் 4 மாத குழந்தை இறப்பிற்கு காரணம் - பெற்றோர் பரபரப்பு

நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உயிரிழந்த 4 மாத பெண் குழந்தையுடன் பெற்றோர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

காவல்துறை அலைக்கழிப்பே என் 4 மாத குழந்தை இறப்பிற்கு காரணம் - பெற்றோர் பரபரப்பு

நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் இவரது மனைவி சுவிதா இவர்களின் 3 வது 4 மாத பெண் குழந்தை இன்று காலை திடீரென வலிப்பு ஏற்பட்டது உடனே மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

மேலும் படிக்க | பொங்கல் கூட்டம் - கேமிரா வேலை செய்யல - பொதுமக்கள் அச்சம்

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் நெல்லை மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்திற்கு இறந்த குழந்தையுடன் வந்தனர். இது குறித்து குழந்தையின் தந்தை முகேஷ் கூறுகையில்  நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன் அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காவல்துறையினர் எனக்கு கடந்த ஒரு வருடமாக தொந்தரவு கொடுத்து வந்தனர். நான் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பமாக காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்ததால் எனது குழந்தை வளர்ச்சி இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில் இன்று காலை திடீரென உயிரிழந்து விட்டது. காவல்துறையின் அலைக்கழிப்பே இதற்கு காரணம் என கூறினார். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.