நாளை நடைபெறுகிறது இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு...

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளதையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் தேர்வுக்கான முன்னேற்பட்டாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது... 

நாளை நடைபெறுகிறது இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு...

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள நீட் தேர்வு மையங்கள் அனைத்தும்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மையங்களில் கிருமி நாசினி மற்றும் வெப்பமானிகள் வைக்கப்பட்டு தேர்வர்களின் பெயர் மற்றும் தேர்வுக் கூட விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேபோன்று, கோவையில் நாளை 8 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 6 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில்,  நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனைத்தை மையங்களிலும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்வு மைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றது.