இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் விற்பனை!!!

இனி அனைத்து நியாயவிலை கடைகளிலும் விற்பனை!!!

அனைத்து நியாயவிலை கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், அத்தொகுதியில் காதி பவன் கிளை அமைக்க அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் சார்பில் காதி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மடத்துக்குளம் தொகுதியில் இளைஞர்கள் விரும்பினால் பிரான்சைஸ் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  

மேலும், கதர் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கதர்  பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:   பற்கள் புடுங்கப்பட்ட வழக்கு: விசாரணைக்கு வராத கைதிகள்... காவல்துறை சார்பில் மிரட்டலா?!