ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி ... கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான நளினி பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி ... கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைதான நளினி உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இந்தநிலையில் கடைசி காலத்தை மகளுடன் செலவிடும் வகையில், நளினிக்கு ஒரு மாத கால பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் பத்மா முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்திருந்தார். அதில், 7 பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானம், ஆளுனரிடம் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.  

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்மா தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, நளினிக்கு ஒரு மாத கால பரோல் வழங்க முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினி பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று வேலூர் பெண்கள் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார். அவர் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.