" நல்லாட்சி மலர மக்கள் காங்கிரஸ்-க்கு வாக்களித்துள்ளனா்". - கார்த்தி சிதம்பரம்.

" நல்லாட்சி மலர மக்கள் காங்கிரஸ்-க்கு வாக்களித்துள்ளனா்". - கார்த்தி சிதம்பரம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய கார்த்தி சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் பா.ஜ.,வின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி ஒரு நல்ல ஆட்சி வரவேண்டும் என்பதற்காக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து பெரும் வெற்றியை பெற்று தந்துள்ளனர் என்றும் சட்டமன்ற தேர்தலை வைத்து பாராளுமன்ற தேர்தல் முடிவு அமையும் என்று கருத்து சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார். 

மேலும்,  காங்கிரஸ்-க்கு இது பூஸ்ட் ஆகும் என்றும், இது தங்களுக்கு பலம் எனவும் கூறினார். அதோடு, "200 யூனிட் மினசாரம் இலவசம், ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் 2 ஆயிரம் ரூபாய், வேலையில்லா பட்டதாரிக்கு 3 ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ ரேஷன் அரிசி இலவசம், மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்ற செய்தியை நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும்"என்றும்  கூறினார். 

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பதை ஆறு மாதத்திற்கு முன்பு சொல்லியிருந்தால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும் எனவும்,  இத்தகைய யுக்தியை பாராளுமன்றத்திலும் கையாண்டோம் என்றால் அதற்கான பலன் கிடைக்கும் என்றும், இந்த தேர்தலை தேசிய கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. மாநில கண்ணோட்டத்துடன்தான் பார்க்க வேண்டும், என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com