
நகர்ப்பகுதிகளில் 300 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள நமக்கு நாமே திட்டத்துக்கான வழிமுறைகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டது.
சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் "நமக்கு நாமே" திட்டம் செயல்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை நகரப்பகுதிகளில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புணரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன.