தேசிய பெண் குழந்தைகள் தினம் .....

தேசிய பெண் குழந்தைகள் தினம் .....
Published on
Updated on
1 min read

தேசிய பெண் குழந்தைகள் தினம்

இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார்.

 பெண்கள் புகழ் 

ஒன்று சொல்லோடு நின்றுபோகவேண்டும் என்றால் ஒரு ஆணிடம் கேளுங்கள் அதுவே செயலாக்கம் பெறவேண்டும் என்றால் பெண்ணிடம் கேளுங்கள். - மார்கரெட் தாட்சர்

"ஒரு பெண்ணை பாதுகாப்பது பல தலைமுறைகளைக் காப்பாற்றுவதாகும்"- கார்டன் பி. ஹிங்க்லி

"ஒவ்வொரு சிறுமியின் சிரிக்கும் முகமே கடவுளின் பிரசன்னத்தின் அடையாளம்." – அமித் ரே

"நம்மில் பாதி பேர் பின்தள்ளப்படும் போது நாம் அனைவரும் வெற்றி பெற முடியாது. உலகெங்கிலும் உள்ள நமது சகோதரிகள் தைரியமாக இருக்க வேண்டும். தங்களுக்குள் இருக்கும் பலத்தை தழுவி அவர்களின் முழு திறனையும் வெளிக்கொண்டுவர வேண்டும்." – மலாலா யூசுப்சாய்

சமூகம் பெண் குழந்தைகள் பிறந்ததுமே கொண்டாடப்படுவதை போல பல குழந்தைகள் இந்த சமூகத்தில் நிராகரிக்கப்பட்டும் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்க உங்கவீட்டு பெண் குழந்தை எப்படி எல்லாம் கொண்டாடுறீங்க காமெண்ட்ல சொல்லுங்க

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com