நட்டாவின் தமிழக பயணம்!!

தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டாவுக்கு, பாஜக சார் பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜே. பி.நட்டா இரண்டு நாள் பயணமாக, இன்று மதுரை வந்தடைந்தார். அவருக்கு தமிழக பாஜக சார் பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் பயணம்:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, முதன்முறையாக மதுரை வந்துள்ள அவர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து, முக்கிய ஆலோசனையில் ஈடுட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை எய்மஸ்:
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜே. பி. நட்டா மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மொத்தம் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மற்றும் தொற்று நோய் பிரிவுக்கென கூடுதலாக 134 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்நிய நேரடி முதலீடு:
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப் பிடும்போது தற்போது அந்நிய நேரடி முதலீடு 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் நட்டா. இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேக் இன் இந்தியா:
இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளதுடன் பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால் சுமார் 83 சதவீத சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாகவும் நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம்:
தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உள்ளது என்று கூறியுள்ளார். ”எங்கள் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவாக உள்ளன. பிரதமர் மோடி ஆட்சியில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனைவரையும் கவனித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.