நீட் தேர்வு விலக்கு... அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

நீட் தேர்வு விலக்கு... அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கோவை காளப்பட்டி அருகே  வீரியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டபட்டுள்ள கட்டிடத்தை   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏ.கே. ராஜன் கமிட்டியில் கூட அனைவரும் நீட் வேண்டாம் என்ற கருத்தை தான் கூறியிருப்பதாகவும்,  இரண்டு முறை டெல்லி சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் அதற்கான அழுத்தத்தை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.