நெல்லை : சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு - பாஜக வேட்பாளர் வெற்றி

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியில், பாஜக வேட்பாளர் குலுக்கல் முறையில் வெற்றிபெற்றார்.

நெல்லை : சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு - பாஜக வேட்பாளர் வெற்றி

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 1,303 ஓட்டுகள் பதிவான நிலையில் அதிமுக வேட்பாளர் லட்சுமி, பாஜக வேட்பாளர் மனுவேல் ஆகியோர் தலா 266 வாக்குகளை பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் மனுவேல்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.