தமிழகத்தின் புதிய டிஜிபி இவர் தான்...?

தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்ற அறிவிப்பு  இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் புதிய டிஜிபி இவர் தான்...?

தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்ற அறிவிப்பு  இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி தமிழக டிஜிபியாக பதவியேற்ற திரிபாதி, வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. யுபிஎஸ்சி குழு மற்றும் மத்திய உள்துறை செயலருடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் தற்போதைய டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சைலேந்திர பாபு மற்றும் கரண் சின்ஹா ஆகிய இருவரில் ஒருவரே புதிய டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு இன்று  வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.