புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் அடையாளத்தை உலக அளவில் உயர்த்தும் - ஜி.கே.வாசன்

புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் அடையாளத்தை உலக அளவில் உயர்த்தும் - ஜி.கே.வாசன்

புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் அடையாளத்தை உலக அளவில் உயர்த்தும் என்பதால் இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என மன்னாாகுடி அருகே  தமாக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி கே வாசன் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேசியவை:

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுதுரதிஷ்டவசமாக எதிர்க்கட்சித் நண்பர்கள் நாடாளுமன்ற தேர்தலில் முன் வைத்து அரசியல் காரணங்களுக்காக இதில் கலந்து கொள்ளாதது  நல்ல முடிவு அல்ல மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் கருத்து. நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டிடங்கள், நூலகங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் பிரதமர்கள் திறந்து வைத்ததை நான் நினைவு கூற விரும்புகிறேன்.  75 ஆண்டு கால சுதந்திரத்திற்காக ஒரு வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றத்தை கட்டி முடித்து, நாட்டினுடைய பிரதமர் இதனை திறந்து வைப்பதிலே எந்த தவறும் இல்லை ஜனநாயகத்தில் இது உட்பட்டது என கருதுகிறேன். பாராளுமன்ற விதிகளுக்கு இது மாறாக இல்லை. மேலும் எந்த பாராளுமன்ற விதிகளுக்கும் இது எதிரானதும் அல்ல. ஒரு தொலைநோக்கு பார்வையோடு பல நூற்றாண்டு காலம் நம்முடைய மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கிறது.  அதிநவீன வசதிகளோடு தொலை தொடர்பு கொள்ள கூடிய அனைத்து வசதிகளோடும் இந்த பாராளுமன்ற கட்டிடம் அமைந்து அமைக்கப்பட்டிருக்கிறது.  குறிப்பாக பிரதமர் அவர்கள் செங்கோலை நிறுவ இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்திருக்கிறது. இது தமிழகத்தற்கு  கிடைத்த இடம் மிகப்பெரிய பெருமை.

New Parliament Opening Likely This Month To Mark 9 Years Of Modi Government  Know More Details | புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ள பிரதமர்  மோடி...எப்போது தெரியுமா?

மேலும் படிக்க | கர்நாடகாவில் பாஜகவின் உத்தரவுகளை திருத்துவோம்...! திரும்பப் பெறுவோம்...! - பிரியங்க் கார்கே.

நம்முடைய கலாச்சாரம் நம்முடைய பண்பாட்டிற்கு எது எடுத்துக்காட்டு. செங்கோல் என்றாலே நேர்மையான ஆட்சி, வெளிப்படைத்தன்மை இதனை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் பொதுவாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இதனை பாராளுமன்றத்திலே வைப்பது என்பது மிக பொருத்தமான ஒன்று. தமிழகத்திற்கு இது மிகப்பெரும் பெருமையை சேர்க்கும். வரலாற்று சிறப்புமிக்க  நிகழ்விலே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். மத்திய அரசு பாராளுமன்ற மரபுகளை மீறவில்ல,  ஜனநாயகத்திற்கு எதிராக அரசு நடக்கவில்லை எந்த முடிவு எடுக்கவில்லை.  75 ஆண்டுகால இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு மிக முக்கிய தைரியமான முடிவு எடுத்து பாராளுமன்ற கட்டிடத்தை எழுப்பி இருக்கிறது என்றால் வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்காக, 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பாராளுமன்றம் இதை உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது அரசியலுக்காக, வாக்கு வங்கிக்காக தேர்தலுக்காக ஆளுங்கட்சியையோ, பிரதமரையோ குற்றம் சாட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

Sengol', a symbol of fair governance, to be installed in new Parliament:  Amit Shah | Mint

குறிப்பாக இதில் இந்தியாவின் முதல் தலைவர் நம்முடைய குடியரசு தலைவர் சம்பந்த படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், அவருடைய தேர்தல் முதல்முறையாக இந்தியாவினுடைய எஸ்.டி. பிரிவு உடைய ஒரு பெண் இந்தியாவின் ஜனாதிபதியாக வரும் போது அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய இரத்தின கம்பள வரவேற்பை எதிர்க்கட்சிகள் கொடுக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் , மக்கள் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஏற்க மாட்டார்கள். ஜூன் 12 தண்ணீர் திறக்கப்படும் நிலையிலே விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், வேளாண் இடுபொருட்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்விப் பணி முதல் குடியரசுத் தலைவர் பதவி வரை - யார் இந்த திரவுபதி முர்மு? |  School Teacher to Indian President: Who is this Dravupati Murmu? -  hindutamil.in

மேலும் படிக்க | குடியிருக்கும் வீடுகளை பாரபட்சம் எடுத்து அகற்றுகின்றனர் - சீமான ஆவேசம் !!!

தூர்வாரும் பணிகளை விரைந்து ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் கடை மடைவரை தண்ணீர் செல்லக்கூடிய நிலையை உறுதி செய்ய வேண்டும். காவிரியில் கர்நாடகத்திலிருந்து மாதாமாதம் பெற வேண்டிய தண்ணீரை பெற்று தர தமிழக அரசு முன்வர வேண்டும். திமுக அரசியல் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி டாஸ்மார்க் கடையை மூடுவோம் என்பதுதான். முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் மக்கள் ஏமாந்த நிலையில் இருக்கிறார்கள். எதிர்மறை வாக்குகள் அதிகரிக்கும்.  

தமிழகத்தில் ஆங்காங்கே நிகழ்கின்ற கள்ள சாராய உயிரிழப்புகள் மற்றும் தஞ்சையில் மதுபானம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிப்பது திமுகவின் செயலுக்கு ஒத்துப் போவது என்று அர்த்தம். மதுவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தி வருகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணம் பொருளாதார ரீதியாக தமிழகத்திற்கு பயன்தரவேண்டும். வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை உறுதி சொல்லும் பயணமாக இருக்க வேண்டும். மழையினால் பருத்தி பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என  ஜி.கே.வாசன் கூறினார்.