உயிரியல் பூங்காக்களில் புதிய திட்டங்கள்...முதலமைச்சர் அறிவிப்பு!!!

உயிரியல் பூங்காக்களில் புதிய திட்டங்கள்...முதலமைச்சர் அறிவிப்பு!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில், மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் சாய்தளப் பாதைகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கான தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, நிதித்துறை, மற்றும் கால்நடைத்துறை முதன்மை செயலாளர்கள், வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குறும்பாபட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிரிதி உயிரியல் பூங்கா, திருச்சி உயிரியல் பூங்கா ஆகிய ஐந்து உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  மேலும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்காவில், மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் சாய்தளப் பாதைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

இதையும் படிக்க:   ஜி-20 பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபரின் ‘சல்யூட்’..!!!