அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை தலைமைச்செயலத்தில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து தூர்வாரி நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக பயன்படுத்தவும், அணைகள் இல்லா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மற்றும் அத்திகடவு- அவிநாசி உள்ளிட்ட பல்வேறு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், நதி நீர் இணைப்பு திட்டங்களான காவேரி- குண்டாறு இணைப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையண்பு ம்ற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.