கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட் என்ன...?

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட் என்ன...?

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதிலிருந்து பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினக்களுக்கு முன்பாக மாண்டஸ் புயல் பெரும் தக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இதன் காரணமாக தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் 17. 12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் 15. 12.2022 & 16. 12.2022 தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த தினக்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிக்க : கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து வழக்கு...! விசாரணையில் வந்த தீர்ப்பு என்ன..?