சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம்; நிதி ஒதுக்கீடு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்பாலம்; நிதி ஒதுக்கீடு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்ட 195 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூபாய் 98 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி, வள்ளுவர் கோட்டத்தில் சுமார் 570 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகளுக்கு 67. 16 கோடியும், நில எடுப்பு பணிகளுக்கு 113.19 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:பிரபல ரவுடி கைது!