சென்னையில் மட்டுமே மூன்றிலக்கத்தில் கொரோனா புதிய பதிவுகள்.....!!

சென்னையில் மட்டுமே மூன்றிலக்கத்தில் கொரோனா புதிய பதிவுகள்.....!!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 649 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமே பூஜ்ய புதிய தொற்று பதிவைக் கொண்டுள்ளது.  குறைந்தபட்சம் 17 மாவட்டங்கள் ஒற்றை இலக்கத்தில் புதிய கொரோனா தொற்றைக் கொண்டுள்ளன.

சென்னையில் புதிதாக 120 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே மூன்றிலக்கத்தில் கொரோனா தொற்றைக் கொண்டுள்ள ஒரே மாவட்டம் ஆகும்.  சென்னையை தொடர்ந்து கோயம்புத்தூர் 96 புதிய தொற்று பதிவைக் கொண்டுள்ளது.  மற்ற அனைத்து மாவட்டங்களும் 50 தொற்றுகளுக்கும் குறைவான பதிவையே கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் 906 கொரோனா தொற்று நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.  தற்போது தமிழ்நாட்டில் 38,033 கொரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஈரோடு(48), செங்கல்பட்டு(44), கிருஷ்ணகிரி(31), சேலம்(28) மற்றும் திருவள்ளூர்(26) ஆகிய மாவட்டங்கள் 25க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றைக் கொண்டுள்ளன.  மற்ற மாவட்டங்கள் 10 முதல் 23 புதிய தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு புதிய நோய் தொற்றும் அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நோய் தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

திருப்பத்தூரில் மூன்று புதிய நோய் தொற்றும் தேனி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 4 புதிய நோய் தொற்றுகளும் கரூர், நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் புதிதாக 5 நோய் தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

இதையும் படிக்க: இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்.....காரணம் இதுதானா?