மருத்துவத்துக்கும் திருநங்கைகளுக்கும் புதிய திட்டங்கள்...

தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 136 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

மருத்துவத்துக்கும் திருநங்கைகளுக்கும் புதிய திட்டங்கள்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு  கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி, கருவிகள் வழங்கதல் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | ஓபிஎஸ்சின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது...!

அந்தவகையில், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், ஆயிரத்து 136 கோடி மதிப்பீட்டில் 44  மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | மறைந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுவின் உருவப்படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!