"இனி போதைப்பொருட்களை கட்டுப்படுத்த புதிய உத்திகள் பின்பற்றப்படும் " - மு.க. ஸ்டாலின்.

"இனி போதைப்பொருட்களை கட்டுப்படுத்த புதிய உத்திகள் பின்பற்றப்படும் " -  மு.க. ஸ்டாலின்.

பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவானர் அரங்க நடந்த போதைப்பொருள் இல்லாத் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக நிகழ்விடத்திற்கு வருகை தந்த அவருக்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்த நிலையில், காவலர்கள் போதைப்பொருள் இல்லாத் தமிழ்நாட்டை உருவாக்க உறுதிமொழி எடுத்தனர். 

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், போதைப்பொருளின் தீமை குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனை குறைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த புதிய உத்திகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

போதைப்பொருளை பயன்படுத்துவோர் மாநில வளர்ச்சிக்கு பாதிப்பாக உள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் சுமையாக இருப்பதாகவும் கூறிய முதலமைச்சர், மாநிலத்தில் இதுவரை 16 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள்; கஞ்சா, லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை  - டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை

போதைப்பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க அறுவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அண்டை மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை கடத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க   |  "நீதிமன்றம் என்.எல்.சி.க்கு மட்டுமல்ல... தொழிலாளர்களுக்கும் தான்" உயர்நீதிமன்றம் கருத்து!