நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் .... அமைச்சர் செந்தில் பாலாஜி!!

நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் .... அமைச்சர் செந்தில் பாலாஜி!!

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில்,  மின் கம்பிகள் அறுந்து விழுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எதிர்காலத்தில் திட்டம் உள்ளதா என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  அதாவது மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் புதிய தொழில் நுட்பம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:   அதிகரிக்கும் கொரோனா... எச்சரிக்கை தெரிவித்த மா. சுப்பிரமணியன்!!